சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா |

சின்னத்திரை தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு (டிடி) சினிமா நடிகைகளை காட்டிலும் அதிக நபர்கள் ரசிகர்களாக உள்ளனர். ‛காபி வித் டிடி' நிகழ்ச்சியில் பல திரைபிரபலங்களை நேர்காணல் செய்த டிடி அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்து கொள்வதில்லை. இருப்பினும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரிய ஸ்டார்களை நேர்காணல் செய்ய டிடி தான் இப்போதும் முதல் சாய்ஸாக இருக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷனுக்காக ராம்சரண், ராஜமவுலி, ஜூனியர் என்டிஆரை டிடி பேட்டி எடுத்திருந்தார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாராவை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தசமயம் திய்வதர்ஷினி நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து, 'லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மகிழ்ச்சியான முகத்துடனும், மனநிறைவுடனும் இருந்தார். அவர் மிகவும் இணக்கத்துடன் தனது 20 ஆண்டுகால உழைப்பு குறித்து இந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். இன்ஸ்பைரிங் நபரான அவருடன் அமைந்த இந்த உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது' என்று கூறியுள்ளார். டிடி - நயன்தாரா காம்போவை விரைவில் திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.