துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் |
பிக்பாஸ் சீசன் 6ல் அடுத்தடுத்த எவிக்சனில் அப்பாவும் மகளும் வெளியேறியுள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவை தனது காதலி என கூறி சுற்றி திரிந்த ராபர்ட் மாஸ்டர் அவரை தவிர மற்ற அனைவரையும் மகள், சகோதரி என்றே பழகி வந்தார். அதிலும், பிக்பாஸ் வீட்டில் குயின்சியை தனது மகளாகவே தத்து எடுத்துவிட்டார். இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முந்தைய எவிக்சனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார். கடந்தவார எவிக்சனில் குயின்சி வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி முதல் வேலையாக தனது பிக்பாஸ் அப்பாவான ராபர்ட் மாஸ்டரை தான் முதலில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில் ராபர்ட் - குயின்சிக்கு இடையேயான தந்தை மகள் பாசத்தை பலரும் சிலாகித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.