இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்த அர்ச்சனா, பிக்பாஸ் நிகச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அதோடு, வைகை எக்ஸ்பிரஸ், ஆடை, டாக்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் அர்ச்சனா. அப்போது அவரது மகள் சாரா அவருக்கு ஒரு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த அர்ச்சனை உணர்ச்சி பெருக்கால் கதறி அழுதுள்ளார். அதுகுறித்து வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டு இருக்கிறார். அதோடு, அந்த கடிதத்தில் தனது மகள் சாரா தன்னுடைய பெருமை குறித்து ஏழு பக்கங்கள் எழுதி இருப்பதாகவும், அந்த கடிதத்தை படித்ததும் தான் ஆனந்த கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.