அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கேரளாவை சேர்ந்த நடிகை ஆயிஷா, தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுபவர். சின்னத்திரை மட்டுமில்லாமல் சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, அடிக்கடி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது அவர் கண்டாங்கி சேலை அணிந்து கொண்டையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனிலும் 'மனோரமா ஆச்சி' என குறிப்பிட்டு போட்டோவுக்கான இன்ஸ்பிரேஷனை தெரிவித்துள்ளார். ஆயிஷாவின் அந்த ஆச்சி கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் ஆயிஷாவின் வெர்ஷடைல் ஆக்டிங் பற்றி புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
'பொன் மகள் வந்தாள்' சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த ஆயிஷா, தொடர்ந்து மாயா, சத்யா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் சத்யா தொடரில் ஆயிஷா நடித்து வரும் டாம்பாய் கதாபாத்திரம் அவருக்கு அதிக புகழை பெற்று தந்தது. தற்போது சத்யா சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.