ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
விஜய் டிவியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள ஒரு தொடர் 'பாக்கியலெட்சுமி'. சமீபத்தில் நடைபெற்ற விருது நிகழ்வில் கூட அதிக விருதுகளை தட்டிச் சென்றது. இரண்டு மனைவிகளுக்கு இடையில் சிக்கித்தவிக்கும் கோபியின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், கோபி படும் கஷ்டங்களை மீம்ஸ்களாக இணையத்தில் உலா வருகின்றன. ராதிகாவுடன் கோபி கொஞ்சி குலாவுவதை எழில் பார்த்துவிட காரில் புலம்பிக் கொண்டிருக்கும் கோபியை, சென்னை 28-ல் பாத்ரூமுக்குள் குமுறும் ஜெய்யின் காட்சியுடன் இணைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். அதே போல் நாட்டாமை படத்தில் கவுண்டமணி செந்திலை பார்த்து 'டேய் தகப்பா' என்று சொல்லும் காட்சியையும், மாரி 2 படத்தில் தனுஷ் வில்லனுக்கு நோஸ் கட் செய்யும் காட்சியையும் எழில் மற்றும் கோபியுடன் இணைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை கிரியேட் செய்துள்ளனர். இந்த மீம்ஸ்கள் பாக்கியலெட்சுமி சீரியல் ரசிகர்களிடம் தற்போது தீயாக பரவி கவனம் ஈர்த்து வருகிறது.