லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 6-ல் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் பாலா. சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கோமாளிகளில் ஷிவாங்கிக்கு அடுத்தப்படியாக முக்கியமான இடத்தில் இருக்கிறார். திரையில் காமெடியானாக தோன்றினாலும், நிஜத்தில் மிகவுன் செண்டிமெண்ட்டான சமூகப்பணியை பாலா செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பெஸ்ட் காமெடியன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்து வரும் சமூகப்பணிகள் குறித்தும் முதல் முறையாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது. பாலா, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதோடு, பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவி செய்து வருகிறார். இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது விருதை பெற்றுக்கொண்ட பாலா, “நூறு பேருக்கு கல்வி கொடுக்காம நான் உயிர கொடுக்க மாட்டேன்... கடவுள்கிட்டயே சொல்றேன்!” என உணர்ச்சி ததும்ப பேசினார். இதை கேட்ட பிரபலங்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர். தற்போது சமூக ஊடகங்களிலும் பாலாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.