2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான வீஜே தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகையாக அறிமுகமானார். அந்த தொடரில் திறமையாக நடித்து ரசிகர்களின் பாரட்டுகளையும் பெற்றார். இருப்பினும், அவருக்கிருந்த முகப்பரு பிரச்னை காரணமாக சீரியலிலிருந்து பாதியிலேயே விலகினார். ஆனால் அதற்காக சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஆல்பம் பாடல், டான்ஸ் என தன்னை மேலும் மெருகேற்றி கொண்டார்.
தற்போது அவரது முகப்பரு பிரச்னை முற்றிலுமாக தீர்ந்து போகவே, ஜீ தமிழ் 'சித்திரம் பேசுதடி' மற்றும் கலர்ஸ் தமிழ் 'ஜில்லுனு ஒரு காதல்' ஆகிய தொடர்களில் அதிரடியாக கம்பேக் கொடுத்துள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா தற்போது போட்டோஷூட்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் ப்ரைடல் கெட்டப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த புகைப்படங்களை 'வீஜே தீபிகா இவ்ளோ அழகா?' என அசந்து போய் பார்த்து வருகின்றனர்.