ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சூப்பர் சிங்கர் சீசன் 2வில் கலந்து கொண்டு பாடி கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளையடித்தவர் ப்ரியங்கா. இவர் குரலில் ஒலித்த 'சின்ன சின்ன வண்ணக் குயில்' பாடல் பல ரசிகர்களின் மனங்களை கட்டிப்போட்டது. அந்த அளவுக்கு திறமையான பாடகி ப்ரியங்காவை இன்ஸ்டாவில் 1.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
இந்நிலையில், இன்ஸ்டாவில் ப்ரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் புது டாபிக்கை கிளப்பிவிட்டுள்ளது. ப்ரியங்கா சமீப காலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கேஷூவலாக இருந்தாலும் அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.
ரசிகர்கள் ஒருபுறம் அதற்கு ஹார்டின்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். மற்றொருபுறம் ஏற்கனவே, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நித்யஸ்ரீ சில படங்களில் நடித்துள்ளார். அவரைப் போலவே ப்ரியங்காவும் சினிமாவில் நடிக்க போகிறார் என தங்கள் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர். சினிமாவில் பின்னணி பாடல்கள் பாடியுள்ள ப்ரியங்கா, நடிக்க வருவாரா என்பது தெரியாது. ஆனால், அவர் பல்மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.