பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சின்னத்திரையின் சரண்யா பொன்வண்ணன் என்று பெயரெடுக்கும் அளவிற்கு அழகிய அம்மா நடிகையாக வலம் வருகிறார் சீரியல் நடிகை கிருபா. ஆனால், இவர் நடிக்க வருவதற்கு முன் ஹெச்ஆராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையிலிருந்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ள கிருபாவை பற்றி சில தகவல்களை இதில் பார்க்கலாம்.
நடிகை கிருபா நடிக்க வருவதற்கு முன் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆச்சி மசாலா கம்பெனியில் ஹெச் ஆராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் 10 வருடங்கள் கணவரோடு சேர்ந்து வாழ்ந்த கிருபா, தற்போது கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
ஆச்சி மசாலா கம்பெனியில் ஹெச் ஆராக இருந்ததால் சில விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிருபாவுக்கு வந்தது. அந்த வாய்ப்புகளை கிருபா பயன்படுத்திக் கொண்டதன் மூலம், விஜய் டிவியிலிருந்து அம்மா கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தது. குழந்தைகளிடம் இதுகுறித்து கேட்க, அவர்களோ, 'உங்களுக்கு விருப்பம்னா பண்ணுங்கம்மான்னு'என நம்பிக்கையளிக்க, ஹெச் ஆர் வேலையை விட்டுவிட்டு நடிகரானார் கிருபா.
கிருபா தற்போது ‛பூவே உனக்காக', விஜய் டிவியின் ‛ஈரமான ரோஜாவே 2' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், சினிமாவில் ‛மெர்சல்', ‛மாநாடு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.