லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
விஜய் டிவி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீரியல் 'செல்லம்மா'. பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார் என சோஷியல் மீடியாக்களில் முன்னதாகவே செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனாலும், அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஹீரோயினாக கமிட்டாகியிருந்த சாந்தினி தமிழரசனும் இந்த தொடரை விட்டு விலகிவிட்டார். எனவே, இந்த தொடர் கைவிடப்பட்டதாகவே சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் நினைத்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் 'செல்லம்மா' சீரியலின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வேலைக்காரன்' தொடரை இயக்கி வரும் இயக்குனர் கதிரவன் தான் 'செல்லம்மா' சீரியலையும் இயக்கவுள்ளார். மேலும் தவிர்க்கமுடியாத காரணங்களால் வெளியேறிய சாந்தினிக்கு பதிலாக மலையாள நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். அவரை பற்றி தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். மேலும், ஆங்கர் மற்றும் ஆக்டரான ஹூசைன் அஹ்மது கான் 'செல்லம்மா' சீரியலில் மீண்டும் ஹீரோவாக கம்பேக் கொடுக்கிறார் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. ஹூசைன் முன்னதாக லெட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.