ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வருபவர் வீஜே அர்ச்சனா. பாரதி கண்ணம்மாவின் வெண்பா கதாபாத்திரத்திற்கு பின் சின்னத்திரையில் அதிகம் பேசப்படும் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், விஜய் டிவி விருது விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வீஜே அர்ச்சனாவின் தாயார், 'என் மகளை எல்லோரும் திட்டுறாங்க. பரீனாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்த இருக்கு. என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாம் நடக்கனும். சீரியலில் வில்லி என்பது வெறும் நடிப்பு தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது வெறுப்பு காட்டாதீங்க. உங்களுக்காக தான் அவங்க நடிக்கிறாங்க' என உருக்கமாக பேசியுள்ளார்.
சீரியலில் வில்லி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலத்தை தருமோ, அதேவேளையில் சில ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அந்த வகையில் அர்ச்சனாவும் சில நெகட்டிவான கமெண்ட்டுகளை சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.