ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சின்னத்திரையில் செல்ல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. தற்போது சினிமாவில் நடிப்பது குறித்து கவனம் செலுத்தி வரும் டிடி, சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக மீண்டும் சின்னத்திரை வந்துள்ளார். எப்போதும் குழந்தை தனத்துடன் ஜாலியாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி, சமீபத்தில் வீல்சேரில் இருப்பது போல் போட்டை ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கு விளக்கமளித்துள்ள டிடி, 'எனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது அதற்காக தான் வீல் சேர் பயன்படுத்தினேன். ஆனால் இந்த முடக்குவாதத்தால், எனக்குள் இருக்கும் குழந்தை தன்மையை ஒருபோதும் தடுக்க முடியாது' என கூறியுள்ளார்.
ஒருபுறம் டிடிக்கு முடக்குவாதம் என்று தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அதேசமயம் டிடி அதை பாசிட்டிவாக அணுகுவதை கண்டு பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
டிடி தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.