மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள விலாசினி, ஆர்ஜே, டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பன்முக திறமை கொண்டவர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர் தான் இந்த விலாசினி. இசைகுடும்பத்தில் பிறந்ததால் இவரும் பாடகியாக வர வேண்டும் என்றே முதலில் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிரியாணி படத்தில் மட்டும் சில வரிகள் பாடியிருந்தார். தொடந்து பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆர்ஜேவாக சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு ஆதித்யா டிவியில் சில காலங்கள் வீஜேவாக இருந்த அவர், அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், நிறத்தின் காரணமாக சினிமாவிலும் நிராகரிக்கப்பட்ட விலாசினிக்கு விஜய் டிவி தான் கடைசியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு அளித்தது. விலாசினி தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
கேரியர் என்பதை தாண்டி, சொந்த வாழ்க்கையிலும் கணவரின் கொடுமையால் துன்பத்திற்கு ஆளான விலாசினி, அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது நடிப்பிலும் ரசிகர்களை மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் தங்கள் அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கும் விலாசினி புதிய போட்டோஷூட்டுகள் மூலம் சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறார்.