பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "புது புது அர்த்தங்கள்" தொடர் 200 எபிசோடை தொட்டு உள்ளது. அபிஷேக் - தேவயாணி முதன்மை வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் பெண்களின் மீதுள்ள இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்ற முயற்சிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற நெடுந்தொடர்களிலிருந்து தனித்து வித்தியாசமாக இருக்கும் இந்த தொடரானது, ஒரு மாமியார் - மருமகள் இடையிலான அன்பான உறவினை மையமாக கொண்டுள்ளது. தனது குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சுற்றியே தனது வாழ்வினை அமைத்துக்கொண்டு, வீட்டிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நற்குணமுள்ள பெண்ணாக லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடித்துள்ளார். இதுவரை இத்தொடரில், வழக்கத்தை மாற்றியமைக்கும் பல்வேறு கதைத் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில் ஒளிபரப்பான இத்தொடரின் அத்தியாயங்களில் அபிஷேக்காக நடித்த ஹரி கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கதாபாத்திரங்களின் திருமணம் எதிர்பாராத சூழ்நிலையில் நிகழ்ந்தது. திருமணம் முடிந்த பின்பு தொடர்ச்சியாக பல்வேறு மகிழ்ச்சியற்ற தருணங்களை கடக்க நேர்கிறது. அதனைத் தொடர்ந்து லக்ஷ்மி தனது சொந்தக் காலில் நிற்கவும், வேறு எவருடைய ஆதரவும் இல்லாமல் தனக்கான மரியாதையைத் தானே ஈட்டுவதற்கும் முடிவெடுக்கிறாள். தொடரின் 200-வது அத்தியாயத்திலிருந்து, தனக்கு பிடித்த சமையல் துறையில் சாதிக்க வேண்டுமெனக் கடினமாக உழைக்கும் ஒரு மன உறுதிமிக்க லக்ஷ்மியை ரசிகர்கள் காணலாம். வெறும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோக்கிய தேடலாக இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை; பெண்கள் உழைத்து தங்களது கனவுகளை சாதித்து, சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பறைசாற்றவுள்ளது.