ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள முகிழ், பார்டர், சூர்ப்பனகை உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையே டுவிட்டரில் ரெஜினாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை தொட்டுள்ளது. தமிழில், ‛கண்ட நாள் முதல்' படம் மூலம் 2005ல் நடிக்க வந்தாலும், 2012ல் இவர் நடித்த, ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது. டுவிட்டரில் 2012ல் இணைந்த இவரை, 10 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர் இதற்கு ரெஜினா நன்றி தெரிவித்துள்ளார்.