தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
படம் வெற்றி பெறுகிறதோ அல்லது தோல்வி அடைகிறதோ என்பதை பற்றி கவலைப்படாமல் தான் நடிக்கும் படம் பேசப்பட வேண்டும் என்கிற கோணத்தில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை டாப்சி. அந்தவகையில் தற்போது ராஷ்மி ராக்கெட் என்கிற படத்தில் தடகள வீராங்கனையாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வரும் டாப்சி இந்தப்படத்தில் நடித்தபோது தன்னை உறைய வைத்த உண்மை ஒன்றையும் கூறியுள்ளார்.
அதாவது பெண் வீராங்கனைகளுக்கு நடத்தப்படும் பாலின சோதனை குறித்து தான் கேள்விப்பட்டு அதிர்ச்சியானதுடன் அதுகுறித்து சில ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டாராம். அதன்படி ஒரு பெண் வீராங்கனை போட்டியில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபிப்பதற்கு முன்பாக தான் உண்மையிலேயே பெண் தான் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இந்த உண்மை என்னை உறைய வைத்தது. இந்த பாலின பரிசோதனை பயிற்சி என்பது பெண் வீராங்கனைகள் தங்களது கனவை அடைவதற்கான தடைக்காளாக இருக்கிறது என்று கூறியுள்ளார் டாப்சி.