பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன.
இந்த படத்தில் பல காட்சிகளில் அஜித் டூப் போடாமல் ஸ்டண்ட் செய்துள்ளார். இதுகுறித்து தற்போது இயக்குனர் வினோத் கூறியிருப்பதாவது, படத்தில் 3 சேசிங் காட்சிகள் உள்ளன. ஐதராபாத்தில் புதிதாக போடப்பட்டு இன்னும் திறக்காத நெடுஞ்சாலையில் ரேசிங் காட்சிகள் ஷூட்டிங் செய்தோம். ரோடு கல்லும் மண்ணும் ஆக இருந்தது. அப்போது ஒரு டயர் வீலை பண்ணும் மாதிரி காட்சி எடுக்கப்பட்ட போது டயர் தடுமாறி அஜித் கீழே விழுந்து விட்டார்.
வேகமாக வந்து விழுந்ததால் அஜித் கை, கால்கள் எல்லாம் காயம் ஏற்பட்டது. நான் இரண்டு கிலோ மீட்டருக்கு தள்ளி இருந்தேன். விஷயம் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாகி இருந்தேன். இடத்துக்குப் போனேன். அப்போது அஜித் உடைந்து போன பைக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சார் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு ஒன்றுமில்லை, பைக்தான் உடைந்துவிட்டது நாளைக்கு ஷூட்டிங்க்கு என்ன பண்றது என்று கேட்டார். ரைடிங் கியரை கழட்டிய பிறகுதான் அவருக்கு அடிபட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. பின் எங்களுக்கெல்லாம் கவலையாகி விட்டது. அப்புறம் அவர் யார் கிட்ட பேசினார், என்ன பேசினார் என்று தெரியாது. அடுத்த நாள் வேறு மாற்று பைக் வந்துவிட்டது.
இவ்வாறு வினோத் கூறியுள்ளார்.