துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ரஜினிகாந்த்தின் முதல் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெளியான '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பிறகு எந்த படங்களும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவும், விரைவில் படப்பிடிப்பை துவங்கவும் ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த படத்தில் இரண்டு பெரிய தெலுங்கு நடிகர்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராம்சரண் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டால் மற்றொரு பெரிய நடிகர் மாற்றப்படுவார் என்றும், ராம் சரண் அல்லாமல் படத்தில் வருண் தேஜ் நடிப்பதாக இருந்தால் மற்றொரு பெரிய நடிகர் இணைவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது பெரிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.