ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் பி.உன்னிகிருஷ்ணன். இவர் தான் நடிகர் விஷாலையும் ஹன்ஷிகாவையும் வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது ஐந்தாவதாக ஆராட்டு என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார்.
இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்ததாக நடிகர் திலீப்பை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார் பி உன்னிக்கிருஷ்ணன். இந்த படத்தின் கதையை புலிமுருகன் பட கதாசிரியர் உதயக்ரிஷ்ணா எழுதுகிறார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திலீப்பை வைத்து கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற படத்தை இயக்கினார் பி உன்னிக்கிருஷ்ணன்.
இந்த இருவரது கூட்டனியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது இன்னொரு வெற்றிப் படத்தை கொடுப்பதற்காக இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களில் நடிகர் திலீப் சர்ச்சைகள் பலவற்றில் சிக்கி கடினமான சூழலில் இருந்த போது அவருக்கு பக்கபலமாக குரல் கொடுத்து வந்தவர் தான் இந்த உன்னிக்கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.