தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் பல வருடங்களாக ஒன்றுக்கொன்று இணைந்தே செயல்பட்டு வருகிறது. இரண்டு மொழிப் படங்களுக்கும் பெரிய வித்தியாசங்களைப் பார்க்க முடியாது.
தமிழ் இயக்குனர்கள் தெலுங்கிலும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் சேகர் கம்முலா, வம்சி பைடிப்பள்ளி இருவரும் அடுத்து தமிழ் நடிகர்களை வைத்து படங்களை இயக்க உள்ளார்கள்.
சேகர் இயக்கத்தில் தனுஷ், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார்கள். சேகர் - தனுஷ் கூட்டணி பற்றிய அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. வம்சி - விஜய் கூட்டணி பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த இரண்டு படங்களுமே பான்-இந்தியா படங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தெலுங்கு ஹீரோக்கள்தான் சமீப காலமாக பான்-இந்தியா படங்களாக நடித்து வருகிறார்கள். அதை தற்போது தனுஷ், விஜய் இருவரும் ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து யார் தெலுங்கு இயக்குனருடன் இணையப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானால் அதற்கு ஓடிடி உரிமையாக கணிசமான தொகை கிடைத்து விடுகிறது. அதனால்தான் பலரும் பான்-இந்தியா படங்கள் பக்கம் திரும்புகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.