ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இதற்கிடையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சின்னத்திரையிலிருந்து ஷிவானி நாராயணன், மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகிய மூவரும் படக்குழுவினருடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற சாண்டி மாஸ்டரும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு கொரியோகிராபராக அவர் பணியாற்றவுள்ளார். இந்த தகவலை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ள அவர், தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் .