பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
ஹாலிவுட், கொரியன் படங்களை காப்பியடித்து இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சில படங்கள் உரிமம் பெற்றும், பல படங்கள் உரிமம் இன்றியும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபகாலமாக பிரபலமான படத்தின் போஸ்டர்களை கூட இப்படி திருடியோ, அல்லது காப்பி அடித்தோ வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம், டைட்டிலுக்கு பஞ்சம் நிலவுவது போல போஸ்டர் டிசைனுக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்கு சமீபத்திய உதாரணம் பேய் மாமா பட போஸ்டர். வடிவேலு நடிப்பதற்காக எழுதிய கதையை அவரால் நடிக்க முடியாத காரணத்தால் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் யோகிபாபுவை வைத்து எடுத்துள்ளார். பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகி பாபுவுடன் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்கு வெளியிடப்பட்ட போஸ்டர் சில வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளிவந்த பூட் படத்தின் அப்பட்டமான காப்பி. இந்தி போஸ்டரில் உள்ள நாயகனின் தலைக்கு பதிலாக யோகி பாபுவின் தலையை வைத்தும் மற்ற நடிகர்களின் படங்களை இணைத்தும் இதனை வெளியிட்டுள்ளனர். இதனை இணையதளத்தில் கிண்டல் செய்துள்ளனர்.