ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் ‛ஒஸ்தி' உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வில்லனாக இவர் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு வந்த சமயத்தில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் செய்யாத காரியத்தை சோனு சூட் முன்னெடுத்து மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக திகழ்கிறார்.
கொரோனா சமயத்தில் வெளிமாநிலங்களில் தவித்த பல தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில், பஸ், விமானம் என அனுப்பி வைத்தவர் தொடர்ந்து இப்போது வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதனாலேயே இப்போதும் சோனு சூட்டிடம் உதவிக் கேட்டு பலர் அவரது வீட்டு வாசலை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சோனு சூட்டிற்கு சொந்தமான நிறுவனம் மற்றும் லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருவமான வரிசோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.