அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் |

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் அண்ணாத்த படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என எப்போதோ அறிவித்துவிட்டார்கள். அதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் மாநாடு படம் வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு திடீரென அறிவித்தார்கள்.
அண்ணாத்த படத்திற்குப் போட்டியாக மாநாடு படம் வருவது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீபாவளிக்கு அஜித் நடிக்கும் வலிமை படமும் வருமா என்பது குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் கடந்த மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. எப்படியும் தீபாவளிக்கு முன்னதாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிவிடுவார்கள் என திரையுலகத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
அண்ணாத்த படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் திமுக.,விற்கு நெருக்கம் என்பதால் எப்படியும் அந்த அனுமதி கிடைக்கும் எனத் தெரிந்தே தான் மாநாடு படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என திரையுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
ஒருவேளை 50 சதவீத இருக்கை தொடர்ந்தால் அண்ணாத்த பட வெளியீடு தள்ளிப் போகவும் வாய்ப்புண்டு. அதனால், போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத நிலையில் மாநாடு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம்.
தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு ஆகிய படங்களை அறிவித்துவிட்டதால் வலிமை படம் அந்தப் போட்டியில் களமிறங்குமா அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.