ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால்.. தொடர்ந்து பில்லா-2 படத்திலும் அஜித்துடனும், சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்திலும் நடிதிருந்தார். தற்போது பாலிவுட்டில் சோலோ ஹீரோவாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
நாற்பது வயதாகும் வித்யுத் ஜாம்வால், விரைவில் திருமண பந்தத்தில் இணைய போகிறார்.. ஆம்.. பிரபல பேஷன் டிசைனர் நந்திதா மதானி என்பவரை காதலித்து வருகிறார் வித்யுத் ஜாம்வால். விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர்ஸ்டைலிஸ்ட்தாகவும் பணியாற்றும் நந்திதா மதனி ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர்.
இந்தநிலையில் வித்யுத் ஜாம்வால், சமீபத்தில் நந்திதாவுடன் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தாஜ்மஹால் பின்னணியில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.