ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சினிமா உலகில் பல விசித்திரங்கள் நடப்பது உண்டு. தங்களுக்கு மகளாக சிறு குழந்தையாக நடித்தவர்கள், வளர்ந்து கதாநாயகியான பிறகு அவர்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி அதிலிருந்து மாறுபட்டு ஒரு முடிவு எடுத்துள்ளதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். சூப்பர் ஹிட்டான அந்தப் படத்தில் கிர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார்.
தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்திற்காக கிர்த்தி ஷெட்டியை அவரது ஜோடியாக நடிக்க வைக்க பேசி வைத்திருந்தார்களாம். ஆனால், அது பற்றி கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். இது பற்றி கேள்விபட்ட கிர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்தாராம்.
இருந்தாலும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு டோலிவுட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளதாம். இப்படியும் ஒரு நடிகர் இருப்பாரா என்று கேட்கிறார்களாம்.