ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டு அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்தார்.
இது குறித்து அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில், “சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கடந்த புதன்கிழமை எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டது. எனது வலது கையில் காயம் ஏற்பட்டது. அதைச் சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உடனே மும்பை திரும்பி, அறுவை சிகிச்சை செய்தேன். எல்லாம் சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை திரும்பினேன். அது நடந்தே ஆக வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்
படப்பிடிப்பில் ஒரு மேஜையில் அவர் ஓங்கி அடிப்பது போன்ற உணர்ச்சி பூர்வமான காட்சி ஒன்று படமாகும் போது யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக உண்மையிலே ஓங்கி அடித்துவிட்டாராம். கொஞ்சம் கனமான மேஜை என்பதால் அது அபிஷேக்கின் கையை நன்றாகவே பதம் பார்த்துவிட்டது என்கிறார்கள்.
கையில் தற்போது பெரிய கட்டுடன் அபிஷேக் இருந்தாலும், திரைக்கதையில் அந்த கையுடனே அவர் நடிப்பது போன்று காட்சியை மாற்றிவிட்டார்களாம். ஓ....இதுதான் யதார்த்தமான திரைக்கதையோ...?.