100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' | பிளாஷ்பேக்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் மறக்க முடியாத 50வது திரைப்படம் “இருவர் உள்ளம்” | வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா : ரசிகர்கள் அதிர்ச்சி | சைனீஸ் உணவு சாப்பிட்டு விட்டு முத்தமிட வந்த நடிகரிடம் வித்யா பாலன் கேட்ட கேள்வி | ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன் | குடும்பத்துடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பஹத் பாசில் | தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன துல்கர் சல்மான் |
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் அருண் விஜய்யின் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார்.
எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி, அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் கேஜிஎஃப் புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.