தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சூரரைப்போற்று. ஏர்டெக்கான் அதிபர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. விரைவில் இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் சூரரைப்போற்று உள்ளிட்ட பல இந்திய திரைப்படங்கள் திரையிட தேர்வாகி இருந்தன. இப்பட விழாவில் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வாகி உள்ளது. அதோடு சிறந்த நடிகருக்கான விருதுக்கு சூர்யா தேர்வாகி உள்ளது. இது சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்த டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.
சமந்தாவுக்கும் விருது
இதே விழாவில் சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸூம் தேர்வாகி இருந்தது. இதில் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக இந்த தொடரில் நடித்த சமந்தா தேர்வாகி உள்ளார்.