யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
பெண்களை, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களை மிகவும் கருணையுடன் நடத்துபவர்கள் நமது மக்கள். கல் மனம் படைத்தவர்கள் கூட கர்ப்பிணிப் பெண்களைப் பார்த்தால் கருணை உள்ளத்துடன் மாறிவிடுவார்கள். அவர்களுக்கு எந்த விதமான சிறு துன்பமும் கொடுக்கக் கூடாது என்று நினைப்பார்கள்.
ஆனால், ஒரு சிலரிடம் அப்படியான குணம் இருக்காது என்பதற்கு நேற்று வெளியான 'கண்ணகி' படத்தின் போஸ்டர் ஒரு உதாரணம். படத்தின் போஸ்டரில் கர்ப்பிணியான கீர்த்தி பாண்டியன் அவருடைய வயிற்றைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது வயிற்றின் தொப்புள் உள்ளிருந்து தொப்புள் கொடி நீளமாக நீண்டிருக்க, அதை வெடி மருந்து திரி போன்று இரண்டு கைகள் நெருப்பு வைக்கத் தயாராக இருப்பது போல போஸ்டரை டிசைன் செய்துள்ளார்கள்.
இப்படியான போஸ்டரை சுதந்திர நாளில் வெளியிடும் அளவிற்கு ஒரு இயக்குனருக்கு கல் மனம் இருக்கிறதா, யார் அந்த இயக்குனர் எனத் தேடிப் பார்த்தால் போஸ்டரில் இயக்குனர் பெயரே இல்லை. அந்த போஸ்டரை இந்த அளவிற்கு கொடூர மனத்துடன் டிசைன் செய்த டிசைனர் யாரோ ?.
கர்ப்ப வயிறையும், தொப்புள் கொடியையும் பெண்கள் புனிதமாக நினைக்கும் நாடு இது. இங்கு இப்படி ஒரு போஸ்டரா என்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூகவலைதளங்களிலும் கண்டனம் எழ தொடங்கி உள்ளது.