ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் அவரது 19வது படத்தை லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, ஆதி வில்லனாக நடிக்கின்றார். நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆதியின் ஜோடியாக அக்ஷரா கவுடா நடிக்கிறார்.
இப்படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படங்களில் அதிக விலைக்கு இந்தி சாட்டிலைட் விற்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையை பெற பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.