தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் நாயகனாக நடிக்கும் ஆபரேஷன் அரபைமா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தில் ரகுமானுடன், டினி டாம், பாலாஜி, நாடோடிகள் அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராகேஷ் பிரம்மானந்தன் இசை அமைத்திருக்கிறார். பீனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. படம் பற்றி இயக்குனர் பிராஷ் கூறியதாவது: நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் வெற்றிகரமான செய்திருக்கின்றனர்.
அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், ஆபரேஷன் அரபைமா. இந்த ஆபரேஷனை நடத்தும் கடற்படை தளபதியாக ரகுமான் நடித்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. என்றார்.