‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நடிகை ராதிகா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ராதிகா தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரையுலகத்தில் 43 ஆண்டுகள் இடைவிடாமல் ஒரு பெண் நடித்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல. ராதிகாவின் 43 வருட திரையுலகப் பயணத்திற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா,” எனப் பாராட்டியுள்ளார்.
ராதிகாவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.




