12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' அனுமதியின்றி நடந்ததால், இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் 'ஷூட்டிங்கை' நிறுத்தினர். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், பல அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் 'ஷூட்டிங்' நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆனைமலை போலீசார் 'டான்' திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வருவாய்த்துறையினர், 19,400 ரூபாய் அபராதம் விதித்து விசாரிக்கின்றனர்.
ஆனைமலை எஸ்.ஐ., சின்ன காமணன் கூறுகையில், ''இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது குழுவினர், 30 பேர் மீது, கொரோனா பரவும் என்பதை தெரிந்தும் கூட்டமாக கூடியது, அனுமதியின்றி கூட்டத்தை சேர்த்தியது, ஊரடங்கு காலத்தில் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது உள்பட, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.