மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் |
ராஜமவுலி இயக்கத்தில் சுதந்திர கால சரித்திரப்படமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக ஆலியா பட், ஜுனியர் என்டிஆர் ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' பட செய்திகளில் ஒலிவியா மோரிஸ் பற்றிய தகவல்கள் அதிகம் வருவதில்லை. கடந்த ஜனவரி மாதம் படத்தில் ஒலிவியா பற்றிய முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. படத்தில் அவர் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதற்குப் பிறகு படம் பற்றிய பல செய்திகள், தகவல்கள் வெளிவந்தாலும் ஒலிவியா மோரிஸ் பற்றி அப்டேட்கள் வெளியாகவேயில்லை. தற்போது படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் ஒலிவியாவும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஓ... மீண்டும் வந்துள்ளது சிறப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிவியா பற்றிய தகவல்கள் கூகுளில் கூட அதிகம் கிடைக்கவில்லை. 2018ல் வந்த டிவி தொடரான ' 7 டிரைல்ஸ் இன் 7 டேய்ஸ்' ல் மட்டும் நடித்த தகவல்தான் இருக்கிறது. அதில் கூட அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. 23 வயதான ஒலிவியா நாடகம் மற்றும் நடிப்பில் பட்டம் வாங்கியவர். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு பிரபலமாகிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.