'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்தவர் அஷிகா ரங்கநாத். மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கியவர், மிஸ்.பெங்களூரு டைட்டில் மூலம் சினிமா நடிகை ஆனார். கிரேஸி பாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக மாஸ் லீடர் படத்தில் சிவராஜ்குமார் ஜோடி ஆனார். அதன்பிறகு மளமளவென நடிக்க தொடங்கியவர் இப்போது கன்னடத்தின் முன்னணி நடிகையாக இருக்கிறார். கருடா, கொட்டிகோபா 3 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவதார புருஷா, ரேய்மோ, மதாகஜா படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லைக்கா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்ப பாங்கான பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இதில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்.கே. சுரேஷ், சிங்கம் புலி, ரவி காளே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். தஞ்சையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது . படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.