நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். தவிர இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகிறது என்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்தும் பிரபல குணச்சித்திர நடிகர்களும் இதில் பங்கேற்று நடித்து வருகின்றனர். யார் யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என அவ்வப்போது சில செய்திகள் யூகமாக வெளியாகி வந்தன. இந்தநிலையில் அதுகுறித்த பட்டியல் ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகிறது.. அந்த பட்டியலின்படி,
சுந்தர சோழர் - பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் - விக்ரம்
அருண்மொழி வர்மன் - ஜெயம் ரவி
வந்தியத்தேவன் - கார்த்தி
குந்தவை - த்ரிஷா
நந்தினி / மந்தாகினி - ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி - ஐஸ்வர்ய லட்சுமி
வானதி - ஷோபிதா
பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்
கடம்பூர் சம்புவராயன் - நிழல்கள் ரவி
மலையமான் - லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் - பிரபு
சோமன் சாம்பவன் - ரியாஸ்கான்
ரவிதாசன் - கிஷோர்
கந்தன் மாறன் - விக்ரம் பிரபு
பார்த்திபேந்திர பல்லவர் - ரகுமான்
என முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இறுதிப்பட்டியலா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.