'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா |
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது கல்வி உதவியாகவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரான சிவமோகா பகுதியில் உள்ள 133 வருடங்கள் பழமைவாய்ந்த அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
இந்த பள்ளியின் கட்டடங்களை புதுப்பித்துக் கொடுப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர் செய்து கொடுக்க இருக்கிறாராம். அவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் இவ்வாறு செய்வது முதன் முறை அல்ல.. ஏற்கனவே கடந்த வருடம் சித்ரதுர்கா பகுதியிலுள்ள நான்கு பள்ளிகளை தத்தெடுத்து இதுபோல உதவி செய்துள்ளார் கிச்சா சுதீப்.