ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சென்னையைச் சேர்ந்த சமந்தா, தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் மணம் செய்து கொண்டார். நாக சைதன்யா மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமாவார்.
தனக்கு நாக சைதன்யாவுடன் திருமணம் முடிந்த பிறகு மாமனார் வீட்டு குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை தனது பெயருடன் சேர்த்து சமூக வலைத்தளங்களில் சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார்.
தற்போது 'எஸ்' என்ற ஒரே ஒரு ஆங்கில எழுத்தில் அந்தப் பெயரை மாற்றியுள்ளார். இது படத்திற்கான பிரமோஷனா அல்லது ஏதாவது வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரமோஷனா என்பது தெரியவில்லை. டுவிட்டர் தளத்தில் மட்டும் தான் சமந்தா இப்படி பெயரை மாற்றியுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் மாற்றவில்லை.
அதே சமயம், இன்ஸ்டாகிராமில் 'எஸ் பிலீவ்' என்று தனது பெயருக்குக் கீழே குறிப்பிட்டுள்ளார். “ஆம், நம்பு' என்ற அர்த்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதற்கான காரணம் விரைவில் தெரிய வரலாம்.
சமந்தா தற்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' என்ற படத்திலும், தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்து வருகிறார்.