டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
இந்தி திரையுலகில் நடிகையாக இருந்து வந்த மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். பின்னர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இரு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி, பல மாதங்களாக எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமூகவலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமீரா, தனது எடை அதிகரிப்பு, மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு, கர்ப்பம் மற்றும் எடையிழப்பும், காதல் பற்றி தனது ரசிகர்களிடம் பதிவுகள் மூலம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரே பிரேமில் தனது இரு போட்டோக்களை ஷேர் செய்துள்ள சமீரா "9 கிலோ குறைத்து விட்டேன், இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது. 92 கிலோ உடல் எடையில் எனது எடை இழப்பு பயணத்தை துவக்கினேன். தற்போது அதிலிருந்து 9 கிலோ எடை குறைந்து 83 கிலோவில் உள்ளேன். இன்னும் 8 கிலோவை குறைக்க வேண்டும். எனது இலக்கை அடைவதற்கான ஒரே வழி நிலையான கவனம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் பாக்சிங் செய்ய துவங்கி இருப்பதாகவும், அது மிகவும் வேடிக்கையாக இருப்பதாகவும் சமீரா கூறி உள்ளார். தான் பாக்சிங் செய்யும் வீடியோவை விரைவில் ஷேர் செய்வதாகவும், உங்களுக்காக எதை செய்தாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள் மிக முக்கியமாக எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறி உள்ளார்.