ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாளத்தில் தொண்ணூறுகளில் ஹீரோவாகவும் தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் முகேஷ். கேரளாவின் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சரிதாவின் கணவர் என்கிற வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு பிரபலமானவர். கடந்த 1988ல் சரிதாவை திருமணம் செய்து கொண்ட முகேஷ் 2011ல் அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பின் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை மறுமணம் செய்து கொண்டார். தற்போது எட்டு வருடங்கள் ஆன நிலையில் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மெத்தில் தேவிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணமாகி எட்டு வருடங்களாகியும் கூட என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரையுலக மற்றும் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஆனால் பல வருடங்களாக அதுதான் தொடர்கிறது. இனியும் அவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். அதேசமயம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணமும் இல்லை. அதனால் குடும்ப வன்முறை என்றெல்லாம் காரணம் சொல்லாமல், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு பிரிவதாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்” என கூறியுள்ளார் மெத்தில் தேவிகா.




