பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 39வது படத்தின் முதல் பார்வை படத்தின் தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. 'ஜெய் பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு சூர்யா நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிட்டனர். அது போலவே, தற்போது 'ஜெய் பீம்' படத்தையும் நான்கு மொழிகளில் வெளியிட போஸ்டரை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேற்று தலைப்பு அறிவிக்கப்பட்ட சூர்யாவின் 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் போஸ்டரைக் கூட தமிழில் மட்டும் தான் வெளியிட்டனர். இப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்கிறார்கள்.
ஆனால், 'சூரரைப் போற்று' போல நான்கு மொழிகளில் முதல் பார்வை என்பதால், 'ஜெய் பீம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் படம் பற்றிய தகவல்களை இதுவரை படக்குழுவினர் அதிகமாக வெளியில் விடவில்லை. இன்று திடீரென வெளியிட்டுள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.