இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதுமட்டுமல்ல சோஷியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருப்பவர். அதேசமயம் இன்னொரு பக்கம் அதே சோஷியல் மீடியாவை பயன்படுத்தி நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் மாளவிகா மோகனன்.
அந்தவகையில் கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை வாங்குவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து சோஷியல் மீடியா மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். ரசிகர்களும் ஆர்வமாக முன்வந்து உதவி செய்தனர்.
தற்போது அந்த மாணவர்களுக்கு 8 டேப்லெட்டுகள், 7 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார் மாளவிகா. மேலும் அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு இன்டர்நெட் வசதியையும் ஏற்படுத்தி தர விரும்பியுள்ள மாளவிகா மோகனன். அதற்காகவும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.