கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கடந்த 6ம் தேதி தொடங்கிய 74வது கேன்ஸ் திரைப்பட விழா நிறைவடைந்தது.
விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். டைடேன் எனும் பிரான்ஸ் படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை ஜுலியா டக்கொர்னோ இயக்கி இருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பெண் இயக்குனர் விருது பெறுவது இது இரண்டாவது முறை.