23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்தவர் கார்த்திக் ராஜ். இவர் கடந்த ஆண்டு திடீரென தொடரிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்டதற்கான காரணத்தை சேனலும் தெரிவிக்கவில்லை. கார்த்திக் ராஜும் தெரிவிக்கவில்லை. விரைவில் இன்னொரு ப்ராஜெக்டில் சந்திக்கிறேன் என்று மட்டும் கூறியிருந்தார். இதற்கிடையில் கார்த்திக் ராஜ் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கார்த்திக் ராஜ், தான் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் அதற்கு பண உதவி செய்யுங்கள் என்றும் கேட்டிருக்கிறார். அவர் மேலும் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:
என்னுடைய அடுத்த திட்டம் குறித்துப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னைச் சிலர் எந்த திட்டமும் செய்ய விடாமல், அரசியல் செய்து கொண்டிருகிறார்கள். சிலர் பின் வேலைகளைச் செய்து நான் படம் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் உன்னால் முடிந்தால் படம் நடித்துக் காட்டு என்று சவால் விடுகிறார்கள்.
உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு எனக்குப் பின்னணி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும் தான்.
இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாகக் கேட்கிறேன். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால் தான் இது முடியும் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீடியோவில் இதுவரை 7 முதல் 8 லட்சம் வரை பணம் வந்துள்ளது. இன்னும் ஒருவாரம் பணம் வரும் என நம்புகிறேன். அதற்கு மேல் நான் நினைத்த தொகை வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த படத்தை என்னால் பண்ண முடியாது. அதற்காக நீங்கள் கொடுத்த பணத்தை செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மீண்டும் உங்களுக்கே திருப்பி கொடுத்துவிடுவேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். நிச்சயம் நான் நினைத்த பணம் வரும் என நம்புகிறேன். பார்க்கலாம் இந்த ஒரு வாரத்தில் என்ன நடக்கிறது என்று...
இவ்வாறு கார்த்திக் ராஜ் பேசியுள்ளார்.