ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள சிலர் திடீரென தெலுங்கு தயாரிப்பாளர்கள் மீது அதிக பாசத்துடன் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். விஜய், தனுஷ் ஆகியோரது அடுத்த இரண்டு படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரிக்கப் போகிறார்கள். இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் தெலுங்கு தயாரிப்பாளருக்குத்தான். இந்த மாற்றங்கள் குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் தங்களது ஆதங்கங்களை அவர்களது வாட்சப் குழுக்களில் வெளிப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இதனிடையே, தெலுங்குத் தயாரிப்பாளர்கள் இருவருக்கு தன்னுடைய அடுத்த இரண்டு படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் தனுஷ். தனுஷ் தற்போது அவரது 43வது படம் என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்குப் பிறகு தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடிக்க உள்ளார். இதற்கடுத்து மித்ரன் ஜவஹர் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறாராம். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகுதான் தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க தேதிகளை ஒதுக்குவாராம்.
தனுஷின் புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து அவரை வைத்து படம் தயாரித்து வரும் தமிழ் தயாரிப்பாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தங்களது படங்களை நடித்துக் கொடுத்த பிறகுதான் தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களுக்குப் போக வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். எனவே, தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கான தனுஷின் புதிய படங்கள் 2022ல் தான் ஆரம்பமாகுமாம்.
தனுஷ் திடீரென தெலுங்குத் தயாரிப்பாளர்கள் பக்கம் தாவியதன் ரகசியமும் தற்போது வெளிவந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து அவர் கட்டி வரும் பெரிய பங்களாவிற்கு பணம் தேவைப்படுகிறதாம். தெலுங்கில் எதிர்பார்த்ததைவிட அதிக சம்பளம் தருவதால்தான் அந்தப் பக்கம் தாவுகிறாராம்.