அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-ல் பெற்றவர் மறைந்த திலீப் குமார். மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷண் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகராவார் மற்றும் பிலிம்பேர் விருதுகள் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.
1993ல் அவர் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுவென்றார். 1997ல் அவர் என்டிஆர் தேசிய விருது பெற்றார். அவருக்கு 2009ல் சிஎன்என் - ஐபிஎன் உடைய வருடத்தின் சிறந்த இந்தியன் - வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதிகபட்ச விருதுகளை வாங்கிய நடிகர் என, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். திலீப் குமார் நடிகர் என்பதைத் தாண்டி மனித நேயமிக்கவராக விளங்கினார். இந்திய மற்றும் பாகிஸ்தானிய மக்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க பாடுபட்டார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
1998ல் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு இந்த விருதை பெற்றவர் திலீப் குமார் தான். கார்கில் யுத்தம் நடந்தபோது, சிவசேனா தலைவர் பால்தாக்கரே திலீப் குமாரை நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதைத் திருப்பித்தர வலியுறுத்தினார். அதற்கு திலீப் குமார் 'இந்த விருது எனது மனிதாபிமான செயல்களுக்காக தரப்பட்டது. அதற்கென என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். ஏழைகளுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கிடையே பண்பாடு மற்றும் இன இடைவெளிகளுக்குப் பாலம் அமைக்கும் பணியை பல்லாண்டு காலமாகவே செய்து வருகின்றேன். அரசியல் மற்றும் மதம் தான் இத்தகு எல்லைகளை உருவாக்கியுள்ளன. எப்படியாவது இருநாட்டு மக்கள் ஒன்றுபட என்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். எனக்குச் சொல்லுங்கள், இது கார்கில் சண்டைக்கு எவ்வகையில் உதவும்?' என்று கேட்டதுடன் விருதை திருப்பி அளிக்க மறுத்துவிட்டார்.