'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது படத்தின் டீசரை தான் பார்த்ததாக எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன். அதில், இந்த டீசரை பார்த்து தான் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டதாகவும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனை புதிய வடிவில் பார்க்கலாம் என்று சொல்லி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .