தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான தி ராஜா சாப் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மாருதி இயக்கி உள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் சர்ப்ரைஸ் ஆக, கதைக்கு வலுவான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்துள்ளார்.. இது ஒரு ஆச்சரியம் என்றால் நடிகர் சஞ்சய் தத்துக்கு இவர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது இன்னொரு அதிர்ச்சி தரும் ஆச்சரியம்.
அதேபோல நடிகை கயல் ஆனந்தியும் இந்த படத்தில் பிரபாஸின் அறிமுக பாடலில் ஒரே ஒரு பிரேம் மட்டும் வந்து செல்கிறார். அந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனம் ஆடி இருப்பாரோ என்று நினைத்தால் அதெல்லாம் இல்லை.. வெறும் இரண்டு நொடி காட்சிகளில் மட்டுமே தோன்றி மறைந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கயல் ஆனந்தி. எந்த விதமான அடிப்படையில் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.




