பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்' படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் ஆகியோருடன் ஹிந்தி நடிகரான ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராத இயக்குனர் நெல்சன் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இந்த எதிர்பாராத அழகான ஒன்று, உங்கள் எல்லாவிதமான அன்பு ஆகியவற்றிற்கு நன்றி சார்,” என ஜாக்கி ஷெராப்பை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சனின் திறமையையும், அன்பையும் பார்த்து ஜாக்கி ஷெராப், இந்த ஸ்கூட்டரை அவருக்கு வழங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை ஜாக்கி அவருடைய பங்கு படப்பிடிப்பை 'ஜெயிலர்' படத்தில் முடித்த பிறகு இந்த அன்புப் பரிசை வழங்கியிருக்கலாம்.




